கணவனே போயாச்சு குழந்தைங்க மட்டும் எதுக்கு? தாய் செய்த மோசமான செயல்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (20:29 IST)
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் சிபிராஜ். கேரளாவை சேர்ந்த இவர் தனது முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சைஜா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதிதேஷ், ஸ்ரீ லட்சுமி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னாள் சிருநீரக கோளாறால் சிபிராஜ் இறந்துவிட்டார்.

அதற்கு பிறகு சைஜா தனது குழந்தைகளோடு தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிபிராஜின் முதல் மனைவியோடு பேசிய சைஜா குழந்தைகளோடு தனியாக வாழ சிரமப்படுவதாக கூறியுள்ளார். சிபிராஜின் முதல் மனைவி தன் தம்பியை அழைத்து வர அனுப்புவதாகவும் அவனோடு கேரளா வந்துவிடும்படியும் கூறியுள்ளார். முதல் மனைவியின் தம்பி அவர்களை அழைக்க சென்னை வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவர் ரொம்ப நேரமாக கதவை தட்டியுள்ளார். யாரும் திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிபார்த்துள்ளார். உள்ளே இரண்டு குழந்தைகளும் இறந்து கிடக்க அருகில் சைஜா உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார். குழந்தைகள் வீட்டிலேயே இறந்துவிட சைஜா மட்டும் தற்போது ஐசியூவில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

என்ன நடந்தது என்று விசாரிக்கையில் சிபிராஜ் பைனான்ஸ் வாங்கி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் கமிசனை பெறுவதை ஒரு தொழிலாக செய்து வந்துள்ளார். உடல்நல குறைவால் அவர் இறந்துவிட்ட பிறகு கடன் கொடுத்தவர்கள் சைஜாவை தொல்லை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதுதான் சைஜா முதல் மனைவிக்கு போன் பேசியிருக்கிறார். ஆனால் முதல் மனைவியின் தம்பி அழைக்க வரும் முன்னரே வாழ்க்கை குறித்து விரக்தி அடைந்திருந்த சைஜா உணவில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்