தந்தைக்கு திதி கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மகனும் தாயும்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (17:55 IST)
தற்கொலை செய்து கொண்ட மகனும் தாயும்
தந்தைக்கு திதி கொடுத்து விட்டு மகனும் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் அருகே நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
 
கடலூர் அருகே நத்தப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் அவருடைய மனைவி லதா மற்றும் மகன் சேதுராமன் ஆகியோர் மிகுந்த சோகத்தில் இருந்தனர் 
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் தந்தை இறந்த முதல் வருடம் என்பதால் திதி கொடுத்த சேதுராமன் முடிவு செய்தார். இதற்கான பொருள்கள் அனைத்தையும் லதாவும் சேதுராமனும் வீட்டில் வாங்கி வைத்துள்ளனர். வீட்டின் உரிமையாளரிடமும் மறுநாள் தனது தந்தைக்கு திதி கொடுக்கப் போவதாக சேதுராமன் தகவல் கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் மறுநாள் சேதுராமன் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது சேதுராமன் மற்றும் லதா ஆகிய இருவரும் திதி கொடுத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து சேதுராமன் மற்றும் அவரது தாயார் லதா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை இறந்த துக்கத்தில் இருந்த சேதுராமன், தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்