தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசை 4 லட்சம் பேர் வாங்கவில்லை: தமிழக அரசு

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (18:43 IST)
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழக அரசு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகையை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என்றும் இதனால் அரசுக்கு ரூபாய் 43 கோடியை 96 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி வந்துவிட்டது என்றும் அந்த தொகை அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொங்கல் பரிசு பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒரு சிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்