கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: கோவையில் மேலும் 16 நாட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல் பால், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை இயங்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.