மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்கம்; சென்னையில் பிரம்மாண்ட மாநாடு!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (10:54 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவை சென்னையில் மாநாடு நடத்தி கொண்டாட உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபின் தமிழக அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என நடிகர் கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் ஓரளவு வாக்குகளை பெற்று மக்களிடையே கவனம் ஈர்த்த நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டியில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த 4வது ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 21 அன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு மூலமாக கொண்டாடப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்