தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளிலும், கூட்டணி பேச்சு வார்த்தைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேமுதிக – அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகாத சூழல் உள்ளது.
இந்நிலையில் மாவட்டம்தோறும் தேமுதிகவினரிடையே பேசி வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் “தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி. தேர்தலில் தனித்து போட்டியிடுவது தேமுதிகவிற்கு புதிதல்ல. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ உள்ளது” என கூறியுள்ளார்.