கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..! – பெண் அர்ச்சகர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (11:52 IST)
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயின்று அர்ச்சகர் ஆகியுள்ள பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டம். இந்த திட்டத்தின் கீழ் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி அமைத்துள்ள அரசு அங்கு அனைத்து சாதி மாணவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்கி கோவில்களில் அர்ச்சகராக பணியமர்த்தி வருகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்த 3 பெண்கள் தற்போது தங்கள் அர்ச்சகர் பயிற்சியை முடித்து பணி நியமனம் பெறுகிறார்கள். அவர்களை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...” என்று பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்