இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை.. இண்டியா கூட்டணிக்குத்தான் ஆபத்து : ஆர்.பி.உதயகுமார்

சனி, 9 செப்டம்பர் 2023 (17:25 IST)
இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் இந்தியா கூட்டணிக்கு தான் தற்போது ஆபத்து என்றும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.  
 
இன்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எந்த விழாவில் பேசினாலும் இந்தியாவுக்கு பேராபத்து என்று கூறுகிறார் 
 
இது ஒரு பொய்யான செய்தி. இந்த செய்தியை அவர் தொடர்ந்து மக்கள் இடையே பரப்பி மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார். 
 
மேலும் இன்றைய நிலையில் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் இண்டியா கூட்டணிக்கு வேண்டுமானால் ஆபத்து இருக்கலாம். என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்