ராணிப்பேட்டையில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் விடுதிக்கு சென்றார்.
ராணிப்பேட்டையில் மக்களுக்கு உதவும் வகையிலான ரூ.250 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக ராணிப்பேட்டை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் இருந்த அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் நல மையத்தின் ஆதரவற்ற குழந்தைகள் விடுதிக்கு திடீட் விசிட் அடித்தார்.
அங்கு குழந்தைகளுக்கு தேவையான வசதிகள், சுகாதாரம் சரியாக பேணப்படுகிறதா என்பதை ஆராய்ந்தார். அவர் சென்றபோது விடுதி கண்காணிப்பாளர் பணியில் இல்லாத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு கிளம்பி சென்றுள்ளாராம். முதல்வரின் இந்த திடீர் விசிட் மற்றும் நடவடிக்கை ராணிப்பேட்டை மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.