அதிமுக சீரழித்தது; நாங்கள் அதை சீரமைக்கிறோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (13:47 IST)
கடந்த ஆட்சியில் அதிமுக தமிழ்நாட்டையே சீரழித்த நிலையில் அதை தற்போது திமுக அரசு சரி செய்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மழை காலத்தை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

இன்று அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்  கட்டுப்பாட்டு மைய செயல்பாடுகள் மற்றும் மழை தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ALSO READ: சென்னை மழைநீர் வடிகால் திட்டம்; வெற்றியா? தோல்வியா?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அதிமுக சென்னையை மட்டுமல்ல, தமிழகத்தையே சீரழித்து விட்டனர். இவற்றை சரிசெய்ய 10 ஆண்டுகளாவது ஆகும். ஆனால் திமுக அரசு விரைந்து செயல்பட்டு சீரமைத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்