நுங்கம்பாக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை!!
புதன், 2 நவம்பர் 2022 (10:09 IST)
நேற்று நுங்கம்பாக்கத்தில் 8 செமீ மழை பெய்துள்ளது. இது 1990 ஆம் ஆண்டு இதே தேதியில் பதிவான 13 செமீ மழைக்குப் பிறகு அதிகபட்ச மழையாகும்.
சென்னையின் நுங்கம்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் 31-ம் தேதி மாலை மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன், பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
இதில் நவம்பர் 1ம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செமீ மழை பெய்துள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையும், 72 ஆண்டுகளில் 3வது மழையும் ஆகும். நவம்பர் 1, 1964 அன்று, நுங்கம்பாக்கத்தில் 11 செ.மீ மழை பெய்தது, 1990 இல் இந்த எண்ணிக்கை 13 செ.மீ ஆக இருந்தது என்று சென்னை மண்டல வானிலை மையத்தின் (ஆர்எம்சி) தலைவர் டாக்டர் எஸ் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை 20 செ.மீ மழை பெய்துள்ளது. வழக்கமாக, இந்த நேரத்தில் சென்னையில் 28 செ.மீ மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் இதனைத்தொடர்ந்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.