போராட்டம் வேண்டாம்: லேட்டாய் ரியாக்ட் பண்ண ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (17:07 IST)
அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
 
1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து கீழ்தரமான முறையில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட மாஃபா அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன்  என்று கூறியிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து ஸ்டாலின் மிகவும் தாமதமாக அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்