ஷோ காண்பிக்க இது வடநாடு அல்ல தமிழ்நாடு... அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (08:53 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக குறித்து பேசியதற்கு முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
 
கடந்த 22 ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனை பட்டியல் போடத் தயாரா என்று அமித்ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பாஜக ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.
 
ஐயோ பாவம், அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால், இன்று முழுவதும் பட்டியல் போடலாம். 
அமித்ஷாவுக்கு முதலில் திமுக என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை. 70 ஆண்டு இயக்கம் இது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது. 
 
அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, திமுக தொண்டனாக அமித்ஷாவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்