ஆட்சி நடத்த முதல்வருக்கு தகுதியில்லை: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ விமர்சனத்தால் பரபரப்பு

வியாழன், 9 ஜனவரி 2020 (16:34 IST)
ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
புதுவையில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில துணை நிலை கவர்னர் கிரண்பேடி அரசுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சல் கொடுத்து கொண்டிருப்பதாக ஆளும் தரப்பு குற்றஞ்சாட்டி வருகின்றது
 
இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. தனவேலு என்பவரின் விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்க மருந்துகள் எதுவும் இல்லை என்றும், பொதுமக்களின் உயிருடன் அரசு விளையாடுவதாகவும் குற்றம் சாட்டிய தனவேலு, பொதுமக்களுடன் பேரணி சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டார். 
 
முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்ப்பதாகவும், நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்