அமைச்சர் விஜயபாஸ்கரை ஆளுனர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: முக ஸ்டாலினின் பழைய ட்விட் வைரல்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (09:24 IST)
ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இன்றைய முதலமைச்சரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பழைய டிவிட்டை சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த டிவிட் வைரல் ஆகி வருகிறது 
 
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு கவர்னரும் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் அதனை கவர்னர் ரவி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும் இது குறித்து சட்டப்படி சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் பதிவு  செய்த ட்விட்டை சவுக்கு சங்கர் பகிர்ந்து உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது
 
தன் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்!
 
சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு லஞ்சப் பணத்தை தானே வசூல் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதால், இனியும் அவர் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது!  “குட்கா புகழ்” விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும்! ...

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்