காத்திருக்க கற்றுக்கொள்... ஏமாற்றமடைந்த திமுகவினருக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (09:25 IST)
உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். திமுக வேட்பாளர் பட்டியலில் 9 டாக்டர்கள், 12 பெண்கள், 21 வாரிசுகளுக்கு வேட்பாளர் பட்டியலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், இது வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல; வெற்றியாளர் பட்டியல் என்பதை மக்களின் ஆதரவு நிரூபிக்கும். 234 தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரே வேட்பாளர். களம் காண்போம்; வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், 7000 பேரை நேர்கண்டு, கள நிலவரம், நம் வலிமை மாற்றார் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன். அடுத்தடுத்த களங்களில் தகுதியான ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்வேன். 234 தொகுதிகளிலும் வெற்றி ஈட்டிட உழைப்போம் வாரீர் என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அண்ணா கூறியதை மேற்கோள்காட்டி சீட் கிடைக்காத திமுகவினருக்கு ஆறுதல் குறிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்