ஓதுவார் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு! – முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:05 IST)
தமிழகத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோவில்கள் உள்ள நிலையில், இந்த கோவில்கள் பலவற்றில் திருமுறைகளை ஓதிட இளைஞர்களுக்கு ஓதுவார் பயிற்சி அளிக்கும் பயிற்சி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக கடந்த காலங்களில் ரூ.1000 வழங்கபட்டு வந்தது. ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் சேகர்பாபு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தற்போது ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்