சிஎம் ஆகி என்ன செய்யனுமோ, அத சிறப்பா செய்றீங்க... காலைவாரும் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (10:47 IST)
பெட்ரோல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து உலகம் முழுவதும் வாகனங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் பெட்ரோல் டீசலின் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இதனால் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது. 
 
இந்நிலையில் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் கடந்த 15 நாட்களாக ஒரே விலையில் இருந்தது. 
 
இந்நிலையில் திடீரென தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்து உள்ளது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ரூ 3.25 காசும் டீசல் ரூ 2.50 காசும் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,  கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் முதல்வர். லாக்டவுன் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பது நியாயமா? முறையா?
 
இதனால் விலைவாசி உயரும், மக்களின் கவலைகள் கூடும். எனவே வரி உயர்வை உடனே திரும்பப் பெறுக என அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்