இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு பதிலடியாக பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து அரசை குறை கூறும் எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். மேலும் “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமரும், முதல்வரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் மட்டும் “ஒன்றிணைவோம் வா” என்று அழைத்து அரசியல் செய்கிறார்” என கூறியுள்ளார்.