ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (19:02 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆன்லைனில் மருந்து வணிகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு ஏற்கனவே மருந்து கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த போராட்டம் கடையடைப்புகளும் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை அனுமதிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஆன்லைன் மருந்து வழங்கும் முறை சமுதாய சீரழிவிற்கும் இளைஞர்கள் எதிர்காலத்துக்கும் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருந்துகள் உள்ளிட்ட மருந்து வணிகத்தை 2 கோடி பேருக்கு மேல் நம்பி இருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் இதனால் சீரழியும் என்றும் இதனால் ஆன்லைனில் மறந்து வணிகத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென மருந்து வணிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓட்டுக்களை கவர்வதற்காக முக ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்