கூட்டுறவு வங்கிகளில் இனி நகைக்கடன் கிடையாது!? – ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (08:32 IST)
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4250 தொடக்க கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நகைக்கடன் திட்டம் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதும் வங்கி ஊழியர்களுக்கு தெரிவிக்காததால் வாடிக்கையாளர்களுக்கு சரியான விளக்கம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வரும் சூழலில், நகைக்கடன்களை ரத்து செய்திருக்கிறது அதிமுக அரசு. இதனால் கூட்டுறவின் நோக்கம் சிதைவதோடு, சாமானிய மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்