அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு! – விரைவில் அவசர சட்டம்!

புதன், 15 ஜூலை 2020 (08:18 IST)
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த பல அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தாலும் மருத்துவ படிப்பில் சேட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்தது.

அந்த குழு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அளித்துள்ள அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி 1 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மற்றும் 1 முதல் 8 வரை தனியார் பள்ளிகளில் படித்து விட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்து படிப்பில் உள் ஒதுக்கீடு பெற தகுதியுடையவர் ஆவர். இதை அவசர சட்டமாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்