மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதே வேலையா? – மு,க.ஸ்டாலின் கண்டனம்

Webdunia
சனி, 9 மே 2020 (10:37 IST)
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மதிப்பிழக்க செய்யும் மத்திய அரசின் புதிய திட்டத்தௌ அரசு திரும்ப பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சத்தமின்றி நிறைவேற்றி வருகிறது. சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன் அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ”மின்கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து – மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்து கொடுத்த மத்திய அரசு இனி ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையர்களின் தலைவர்களை கூட மத்திய தேர்வுக்குழுவே தேர்வு செய்யும். ஏற்கனவே உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் தமிழகம் பல்வேறு நஷ்டங்களை சந்தித்து வருகிறது. இப்பொழுதும் மத்திய அரசுக்கு இணங்கி ஆமாம் சாமி போடாமல் இந்த சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்