தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று தமிழகத்தில் 600 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக தெரிவித்துள்ளார். . இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 13980 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் மொத்தம் 2,16,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.