எங்கள் கழக தலைவர் தமிழ் மக்கு?? – போஸ்டரை நேரா ஒட்டி இருக்க கூடாதா!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (09:13 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 67வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டது. திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தன்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வேண்டாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆனால் திமுகவினர் வழக்கம் போல மு.க.ஸ்டாலினை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். அதில் ஒரு போஸ்டர்தான் தற்போது வைரலாகியுள்ளது. சுவர் மீது மடித்து ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் “எங்கள் கழக தலைவர் தமிழ் மக்கு” என்று இருக்கிறது. இதை பலர் கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் திமுகவினரோ “தமிழ் மகனுக்கு” என்றே போஸ்டரில் அச்சடிக்கப்பட்டிருந்ததாகவும், சுவரில் மடக்கி ஒட்டப்பட்டதில் சில எழுத்துக்கள் மறைந்து மக்கு என்றாகி விட்டதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்