கூட்டணிய கழட்டி விடு; சீனியர ஒதுக்கி விடு: உதயநிதி ஸ்கெட்ச் என்ன??

செவ்வாய், 3 மார்ச் 2020 (12:16 IST)
வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளாராம். 
 
வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக-வுக்கு அரசியல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இவர்களின் வியூகங்களை தவிர்த்து உதயநிதி ஸ்டாலினும் சில ஐடியாக்களை அவ்வப்போது கொடுத்து வருகிறாராம். 
 
ஆம், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும்,  இளைஞர் அணிக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் ஐடியா கொடுத்துள்ளாராம். இதையே பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. 
ஏற்கனவே, இடைத்தேர்தலின் போது கூட்டணிகளுக்கு குறைவான சீட்டுகளை கொடுக்க இரச்சாரத்தின் போதே கேட்டவர் உதயநிதி. அதோடு, இளைஞர்களையும் கட்சியில் வளர்த்துவிடவும் நினைப்பவராக இருக்கிறார். சீனியர்களின் அரசியல் அனுபவத்தை வைத்து இளைஞர்களின் செயல்திறனை வைத்து கட்சியை முன்நடத்த உதயநிதி ப்ளான் செய்து வருவதாகவும் தெரிகிறது. 
 
ஆனால், இவை அனைத்தையும் திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா அல்லது வழக்கமான பாணியுலேயே பயணிப்பாரா என்பது தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே புலப்படும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்