தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வியாழன், 20 ஜனவரி 2022 (15:42 IST)
கீழடி அகழ்வாய்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் மேலும் 7 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கீழடி பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்கள் தமிழர் பண்பாட்டை குறித்த ஆய்வில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அகழ்வாய்வுகளை அதிகரிக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 8வது கட்ட ஆய்வு நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3வது கட்டமாக அகழாய்வு நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் 2வது கட்ட அகழாய்வும், கங்கை கொண்ட சோழபுரத்தில் 2வது கட்ட அகழாய்வும் நடைபெறும்.

தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள் புல ஆய்வு நடத்தப்படும்.

வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய இடங்களில் முதல்கட்ட ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வுகள் பிப்ரவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்