சங்க காலத்திலிருந்தே கள் குடித்தோம்; இப்போது தடையா? – போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!

வியாழன், 20 ஜனவரி 2022 (11:21 IST)
தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க கோரி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கள் இறக்கி விற்க அனுமதி அளிக்க கோரியும், கள் இறக்குபவர்களை கள்ளசாரய வழக்குகளில் கைது செய்துள்ளதை கண்டித்தும் தமிழ்நாடு கள் இயக்கம் வருகின்ற 21ம் தேதி கள் இறக்கும் அறப்போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பனங்கள் தென்னங்கள் ஆகியவை சங்க காலம் முதலே தமிழர்கள் உணவு பாரம்பரியத்தை இருந்து வருவதாகவும், கள்ளில் மதுத்தன்மையின் உள்ளடக்கம் 1% முதல் 6%க்குள் மட்டுமே உள்ளதால் அவை தமிழ்தேசிய மதுபானமாக அறிவிக்கப்படும் என முன்பே தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் கள் இறக்க அனுமதி அளித்து தமிழக அரசு டாஸ்மாக் மதுவின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவும், பனை பொருளாதரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்