முன்னாள் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட பலர் வீட்டில் சமீப காலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்ததை தொடர்ந்து தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கே.பி.அன்பழகன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “திமுக அரசு கடந்த 9 மாதங்களாக மக்களிடம் தோல்வி அடைந்து விட்டது. அதனை மக்களிடம் இருந்து திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விடுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.