கொரோனா குறித்து மதரீதியாக பேசினால் நடவடிக்கை – எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (12:06 IST)
கொரோனா பாதிப்புகளுக்கு மத சாயம் பூசுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலர் டெல்லியில் நடந்த மத நிகழ்வுக்காக சென்று வந்தவர்கள் என்று செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து பலர் குறிப்பிட்ட மதத்தையும் மதத்தினரையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ”கொரோனா பாதிப்பு விவகாரத்தில் சாதி, மதம் பார்க்கக்கூடாது. கோரோனா குறித்து மத ரீதியாக வதந்திகளை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்