தமிழகம் கொரோனா தொற்று பரவும் பகுதியாக அறிவிப்பு – அடுத்து என்ன நடக்கும்?

வியாழன், 2 ஏப்ரல் 2020 (11:31 IST)
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தமிழத்தை கொரோனா பரவும் பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 110 கொரோனா பாதிப்புகள் உறுதியான நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்