தீபாவளிக்கு ரேசன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபா? யார் பாத்த வேல இது? – செல்லூரார் வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (08:52 IST)
தமிழகத்தில் தீபாவளிக்கு பொதுமக்களுக்கு ரேசன் கார்டுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியானது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொங்கள் உணவு பொருட்களுடன் ரூ.1000 பணமும் தமிழக அரசு சார்பில் “பொங்கல் பை” என வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தற்போது பலருக்கு வருமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் தீபாவளியை கொண்டாட தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைதளங்களில் போலியான செய்தி வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “தமிழக ரேசன் கடைகளில் தீபாவளிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதாக யாரோ போலியான செய்திகளை வெளியிட்டுள்ளனர். மக்கள் அதை நம்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்