தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திருத்தணி புறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் இதுகுறித்து பேசிய போது “தான் திருத்தணியில் முருகனை வணங்கவே செல்வதாக முருகன் விளக்கம் அளித்துள்ளார். எனினும் அவர் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்த இருப்பதாகவும் பாஜக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.