டாஸ்மாக் கடைகளுக்கு 12 ஆயிரம் பில்லிங் மெஷின்: அமைச்சர் முத்துசாமி தகவல்..!

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:41 IST)
டாஸ்மாக் கடைகளுக்கு 12000 பில்லிங் மெஷின் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக வீட்டு வசதிகள் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மது விற்பனை அரசுக்கு வரக்கூடிய வருமானம் என்பதால் விற்பனை குறித்து மறைத்து சொல்வதில் அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மது விற்பனை சில இடங்களில் குறைந்ததால் கண்காணிப்பு செய்ய மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மது பிரியர்கள் பழக்கத்தை விட்டு மது கடைகளில் விற்பனை குறைந்து வருமானம் குறைந்தால் அரசு மகிழ்ச்சி அடையும் என்று தெரிவித்தார்.

மேலும் டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மெஷின் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பில்லிங் மெஷின் நடைமுறைக்கு வரும் போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த அனைத்து வகை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்