டாஸ்மாக் வேண்டும் என்ற போராட்டத்தில் திடீர் திருப்பம்.. பெண்கள் அளித்த அதிர்ச்சி பேட்டி..!

Siva

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (16:07 IST)
தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பெண்கள் மதுக்கடை வேண்டாம் என்று தான் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீரென பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரண்டு தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சில பெண்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்த போது ’நாங்கள் எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என்று எங்களுக்கு தெரியாது, தலைக்கு 300 ரூபாய் கொடுத்து போராட்டத்துக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகம் சென்ற பின்னர் தான் மதுக்கடை வேண்டும் என்ற போராட்டம் என்பது தெரிய வந்ததாகவும் இதனை அடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் எங்களுக்கு மதுக்கடை வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக திட்டமிட்டு பணம் கொடுத்து பெண்களை மது கடை வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட வைத்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்