திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி மற்றும் வடசின்னாரி பாளையம் ஊராட்சியில் ரூ.8.97 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோ. மலர்விழி தலைமை தாங்கினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாவட்டங்களில் இருக்கக்கூடிய திட்டப்பணிகளை அனைத்தும் விரைவாக மக்களுடைய பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. கலைஞர் உலக அளவில் மகளிருக்கான ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி சொந்த காலில் நிற்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து இன்றைக்கு பல லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாகி மகளிர் சொந்தமாக பல சுய தொழில்களை செய்து உயர்ந்துள்ளார்கள்.
மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணத்திட்டம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த புதிய திட்டப் பணிகளை பயன் படுத்திக்கொண்டு பொதுமக்கள் பயன்பெற