ஆர்கே நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றன.
இந்நிலையில் தினகரன் அணியை சேர்ந்த அமைச்சர்கள் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததால் அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் அமைச்சர் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் போன்றோர் கட்சியினருடன் ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பதாக அங்குள்ள சிலருக்கு தகவல் சென்றுள்ளது.
நன்றி: நக்கீரன்
அவர்கள் இதுவரை யார் யாருக்கு பணம் கொடுத்துள்ளனர், யாருக்கு எல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் எழுதி வைத்து பணம் கொடுத்து வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்து வந்த சிலர் அமைச்சர் உதயகுமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கூடியதாலும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமலும் கட்சியினர் உதவியுடன் அமைச்சர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.