மிக்ஜாம் புயல்: 'நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்- கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (19:44 IST)
மிக்ஜாம் தீவிர புயலால் சென்னையில் அதிக கனமழை பெய்து வரும் நிலையில்,  அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மிக்ஜாம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெதுவாக வட திசையில் நரகத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த 6 மணி   நேரத்தில் மழை குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக மழை பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இரவு 12 மணிக்கு மேல் மழை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலில் மக்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பகுதிவாரியாக அமைச்சர்களை  நிமியத்து  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில்  மேலும் 7 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளதுடன், நிவாரண பணிகளை துரிதப்படுத்த முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  3

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.

மிக்ஜாம்   புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி  மக்கள் நீதி மையம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்