கருணாநிதி, எம்ஜிஆர் படங்களுடன் அழகிரி போஸ்டர்: மதுரையில் பரபரப்பு!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (19:48 IST)
கருணாநிதி, எம்ஜிஆர் படங்களுடன் அழகிரி போஸ்டர்:
திமுகவின் போஸ்டர்களில் பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோர் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இன்று திமுக தலைமை கழகத்திடம் அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மதுரையில் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களுடன் அழகிரியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ‘விளைவுகளை ஏற்படுத்தாத எந்த செயலும் செயல் அல்ல, செயலே புறப்படு என்ற வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன 
 
இந்த போஸ்டரில் கருணாநிதி எம்ஜிஆர் அழகிரி மற்றும் தயாநிதி அழகிரி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எம்ஜிஆர் கருணாநிதி பெயரை இணைத்து அழகிரி புதிய கட்சியைத் தொடங்கப் போகிறார் என்ற யூகமும் கிளம்பியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அழகிரி தனது அரசியல் நிலைமையை விவரிப்பார் என்றும் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்