திமுக - அதிமுக பஞ்சாயத்தில் குளிர் காயும் கமல்??

புதன், 23 டிசம்பர் 2020 (12:42 IST)
திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி என் பணியை சுலபமாக்கிவிட்டனர் என கமல் பேச்சு. 
 
இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கடலூரில் இன்று, அனைவரும் வெட்கமின்றி பகிரங்கமாக ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்துவிட்டு சிறை செல்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
 
வருமான வரி செலுத்தியது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும். ஊழல்வாதிகளை பதவியில் அமர விடக்கூடாது. திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி என் பணியை சுலபமாக்கிவிட்டனர் என பிரச்சாரத்தில் பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்