15 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (13:19 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான தகவலின்படி நீலகிரி கன்னியாகுமரி கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து அறிவிப்பின்படி வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
 
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய திருப்பூர் திண்டுக்கல் தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் ஈரோடு சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்