சென்னை அண்ணா நகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்திய ஒரு இளம் பெண், அதில் பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடியாக அந்த மசாஜ் சென்டர் சோதனை செய்யப்பட்டது. பெண் காவலர்கள் உட்பட தனிக்குழு மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை பாலியல் தொழில் நடத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, மசாஜ் சென்டரின் உரிமையாளர் பிரேமா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. மேலும், பாலியல் தொழிலுக்காக தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர்.