சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளதாகவும் அதேபோல் வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களிலும் மினி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஏற்கனவே மகளிர்களுக்கு இலவச பேருந்து வசதி இருக்கும் நிலையில் தனியார் மினி பேருந்துகளுக்கு பெண்களின் ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் அரசு போக்குவரத்து சேவை அதிகம் இல்லாத இடங்களில் தனியார் மினி பேருந்துகளை இயக்கப்பட்டால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மினி பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.