கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் 4 கிமீ நீட்டிக்கப்படுகிறதா? பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva

வியாழன், 23 ஜனவரி 2025 (12:21 IST)
கோயம்பேடு முதல் ஆவடி வரை புதிய மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த திட்டத்தில் கூடுதலாக நான்கு கிலோமீட்டர் நீடிக்க  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை   மெட்ரோ ரயில் திட்டம் கோயம்பேடு முதல் ஆவடி வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதனை பட்டாபிராம் பகுதியை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பட்டாபிராமன் பகுதியில் இருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வந்து செல்வதால் இந்த திட்டம் நீடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கோயம்பேடு ஆவடி இடையே 16 கிலோமீட்டர் வரை மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 கிலோமீட்டர் நீடிக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு 6500 கோடி கணக்கிடப்பட்டு உள்ளதாகவும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 15 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. வாழ்வின், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், இந்த திட்டத்தால் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்