அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை.. அதிக வெப்பம் எந்தெந்த மாவட்டங்களில்?

Siva
திங்கள், 13 மே 2024 (08:43 IST)
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் சேர்ந்துள்ளதால் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது என்றும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இருப்பினும் தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஐந்து தினங்களில் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என்றும் 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மே 15 ஆம் தேதிக்கு பிறகு ஓரளவு வெப்பம் குறைய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை உள்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்