அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva

சனி, 11 மே 2024 (07:56 IST)
தமிழகத்தில் ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது என்றும் அதனால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது என்றும் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது 
 
அது மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை,, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
 

pic.twitter.com/XIIldGDbpI

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 11, 2024
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்