மனநலம் பாதித்த பெண்ணை தந்தை - மகன் கூட்டு பலாத்காரம்: வெடித்தது சர்ச்சை!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (11:29 IST)
தந்தை - மகன் கூட்டாக சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரியலூர் மாவட்டம் ஜெயன்கொண்டான் பகுதியில் வசித்து வந்த குமார் மற்றும் அவரது மகன் காளிதாஸ் அந்த பகுதியிலேயே வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நைசாக பேசி வரவழைத்து பல முறை வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 
 
இதில் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இதனை அறிந்து கோபமடைந்த அந்த பெண்ணின் சகோதரன் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமார் மற்றும் அவரது மகன் காளிதாஸை பிடித்து விசாரித்துள்ளனர். 
 
போலீஸாரின் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட தந்தையையும் மகனையும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்