மறைந்த முதல்வர் ஜெயலலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுகவில் பிரச்சார பேச்சாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், ஜெ.வின் மறைவிற்கு பின் தீவிர அரசியலில் இருந்து கடந்த சில மாதங்களாகவே விலகி இருந்தார்.
அதோடு, சசிகலாவின் தலைமையை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தார். ‘யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்கார்ந்துள்ளார் என்று நினைத்தாலே தூக்கம் வரவில்லை’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். மேலும் அரசியலில் இருந்து விலகி இலக்கிய கூட்டங்களில் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அவர் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். அதன் பின் அதிமுகவில் தொடருவதாகவும், கட்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் எனவும் பேட்டி கொடுத்தார்.
இப்படி அந்த பல்டி அடித்த அவரை சமூக வலைத்தளங்களில் உள்ள நெட்டிசங்கள் ஏகப்பட்ட மீம்ஸ்களை போட்டு கிண்டலடித்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...