'மீ டூ ' இயக்கம் இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது...

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (17:25 IST)
உலக முழுக்க பெண்கள் பாலியல் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் தம் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் இயக்கமாக இந்த மீடூ இயக்கம் இருக்கிறது.
 
இந்த இயக்கம் துவங்கி ஒரு ஆணாடி நிறைவு செய்கிறது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த தரான புர்க் என்ற சமூக செயல் பாட்டாளார் இந்த இயக்கத்தை 2006 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதற்காக தொடங்கினார். 
அனால்  இது தொடங்கப்பட்ட போது இது பரவலாக அனைவராலும், அறியப்படவில்லை . ஆனால் சென்ற வருடம் 2017 அக்டோப்ர் 10 ஆம் தேதி ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளார் ஹர்வி வெய்ஸ்டேன் மீது நிறைய பெணகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
 
அதனை தொடர்ந்து உலகம் முழுக்க இந்த மீடூ இயக்கம் பெரும் பிரபலம் அடையத் துவங்கியது.
 
இந்நிலையில் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார்.
 
இதனையடுத்து தனுஷீ தத்தா என்ற ஹிந்தி நடிகையும் இந்தி நடிகரான நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது பாடலி சின்மயும் தமக்கு பாலியல் தொந்தரவு விடுத்தாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறியிருந்த அதே சமயம் பெயர் சொல்ல விரும்பாத சிலருடைய பாலியம் தொடர்பான அவர்கள் பாதிக்கப்பட்ட  பதிவுகளையும் அதில் அவர் பதிவிட்டிருந்தார்.
 
குறிப்பாக ஒரு பிரபல இணையதள பத்திரிக்கையாளர் நடிகர் ராதாரவி மீது குற்றச்சாட்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆகமொத்தம் பெண்கள் தங்களின் மனதுக்குள் அடைத்து வைத்து அழுத்தம் தந்துகொண்டிருந்த பிரச்சனைக்கு இந்த மீடூ இயக்கம் ஒரு தேறுதலாக ஆறுதலாக உள்ள  அதேசமயம் பெண்கள் பாதுகாப்பிக்கும் அரணாகவும் இவ்வியக்கம் விளங்குகிறது என்றே தோணுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்