அவருடைய பேச்சில் அனல் கலந்தாலும் முக. அழகிரியின் பெருமை குறித்தும் வைகோ சில இடங்களில் பேசினார். இது மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்ததாக கூறப்படுகிறது. சகோதரராக இருந்தாலும் மு.க.அழகிரியை தனது அரசியல் போட்டியாளராக கருதி வரும் அழகிரியை தன்னுடைய மேடையிலேயே வைகோ பாராட்டி பேசுவதா? என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் அழகிரியின் பேச்சை வேண்டுமென்றே பேசவில்லை, ஒரு புளோவில் வந்துவிட்டது என வைகோ தரப்பினர் மறுத்துவிடாலும் வைகோ உண்மையில் தெரியாமல் பேசினாரா? அல்லது ஸ்டாலினை கடுப்பேற்ற வேண்டும் எபதற்காக பேசினாரா? என்பது புரியாமல் திமுகவினர் திணறலில் உள்ளனர்.